November 27, 2022

முல்லைத்தீவில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!

முல்லைத்தீவில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனுஜன் என்பவரது வீட்டிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து வீட்டிலிருந்த காஸ் லீக் ஆனாதிலேயே வீடு தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தின் போது வீட்டில் இருந்து எந்தவித உடமைகளும் மீட்க முடியாத அளவிற்கு அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன.

வீட்டில் சமையலுக்காக வாங்கி வைத்திருந்த காஸ் லீக் ஆகி வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்தபோது அயலவர்களின் உதவியை நாடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போதும் உடமைகள் எவற்றையும் காப்பாற்ற முடியாத அளவுக்கு தீ பரவி உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.

இருப்பினும் உயிர்ச்சேதங்கள் காயங்கள் எதுவும் இன்றி வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மடிக்கணணி தொலைக்காட்சி வானொலி பெட்டி வீட்டுத்திட்ட ஆவணங்கள் காணி ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் பணம் நகை என்பனவும் எரிந்து சாம்பலாகி உள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.