November 27, 2022

கேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து மற்றும் உதைபந்தாடடப் போட்டிகள்!


தமிழீழ விளையாட்டுத்துறையின்ஆரம்பமும் அதன் வளர்ச்சியும்…………….

.தமிழீழ விளையாட்டுத்துறை முதலாவது கட்டமாக 2001ம் அண்டு கன்னி முயற்சியாக வன்னி நலப்பரப்பை உள்ளடக்கிய விளையாட்டத்துறையின் ஆரம்பித்தது. இதன் ஆரம்பகட்ட வேலையாக.விளையாட்டு ஒருங்கினைப்புக்குழு,தமிழீழ கராத்தே சங்கம்,மத்தியஸ்தர்கள் ஒருங்கிணைப்பு,விiயாட்டுப் போட்டிகள் நடத்துதல் போன்ற கட்டமைப்புகளை ஆரம்பித்தோம்.வன்னிப்பகுதிகளை பொறுத்தவரை மக்கள் வாழ்விடங்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருந்தமை யாவரம் அறிந்ததே.

இந்த சூழலில் இளைஞர்கள் விளையாட்டுக்களை ஆரம்பிப்பதற்கு ஏற்புடைய மைதானங்கள் மற்றும் உபகரண வசதிகள் எதுவும் அற்ற நிலையிலேயே இருந்தார்கள்.இந்த காலகட்டத்தில் கிளிநொச்சியில் அமைந்துள்ள மத்திய மைதானத்தில் உள்ள கண்ணி வெடிகள்,பொறிவெடிகள் அகற்றுவதற்காக அந்த மைதானத்தை சீரமைக்கும் பொறுப்பு மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இப்பணியை பூரணமாக செய்து தந்தது மட்டுமல்ல அவர்களே அவ் மைதானத்தில் இறங்கி விளையாட்டு நிகழ்வொன்றை நடத்தியும் காட்டினார்கள்.

அத்துடன் அரச அதிபரின் முயற்சியால் இராணுவ மண் அனைகள் காப்பரன்கள் தரமட்டமாக்கி துப்பரவும் செய்யப்பட்டது.இப்படியாகவே இளைஞர் சமுதாயத்தின் இன்றியமையா சொத்தாகவுள்ள விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றஅவலுடன் தமிழீழ விளையாட்டுத்துறை தனது ஆரம்பப் பணியை தொடர்ந்தது.இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுத்துறையின் வளர்ச்சி போக்கில் தமிழீழ தேசிய பெருவிளையாட்டு விழா ஒன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.

இப்போட்டி வன்னி பெருநிலப்பரப்பு பிரதேசங்கள் ரீதியாக பிரிக்கப்பட்டு இடம் பெற்றபோதிலும் மன்னார் நகரில் இருந்து போட்டியாளர்கள் சமூகம் தந்திருந்தார்கள்.2002ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி முதல் 25ம் திகதி வரை போட்டிகள் இரவு பகல் என்று நடைபெற்றது. நீண்ட கால இடைவெளியின் பின் தமிழ்ச் சமூகம் ஓர் பெருவடிவிலான விளையாட்டு விழாவை சந்தித்த நிகழ்வு என்றால் இதனை குறிப்பிடலாம்.

இப்போட்டி நிகழ்வில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவைத்தழுவிக் கொண்ட நான்கு மாவீரர்களான கேணல் சங்கர் மென்பந்தாட்ட போட்டி, லெப் கேணல் விக்ரர் உதைபந்தாட்ட போட்டி, மேஜர் அல்பேட் கரப்பந்தாட்டப்போட்டி, மேஜர் சோதியா வலைப்பந்தாட்டப் போட்டி, என நான்கு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மடு,மல்லாவி,விசுவமடு,புதுக்குடியிருப்பு, அக்கராயன்,முழங்காவில் ஆகிய ஆறு பிரதேச அணிகளுடன் மன்னார் மாவட்ட இராணுவ கட்டு;பபாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக மிக முக்கிய விளையாட்டாக தமிழீழத்தில் நாம் கருதும் கராத்தே கலையை சீரமைத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எம்மிடம் தோன்றியது. இக்கலை எமது அமைப்புக்குள்ளே நீண்ட காலமாக எமது தலைவரால் போராளிகளுக்கு ஊட்டப்பட்டு வருகிறது தமிழீழம் எங்கும் இது வியாபித்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற அக்கறையும் எமது தலைவர் அர்களுக்கு நீண்ட காலமாகவே இருந்துள்ளது இதன் அடிப்படையில் அனைத்து கராத்தே ஆசிரியர்களையும் அழைத்து தமிழீழ கராத்தே சம்மேளனம் என்ற ஓர் அமைப்பை நிறுவினோம் அதுமட்டுமல்ல 2002ம் ஆண்டெ எமது தேச விடுதலைப்போரில் கராத்தே கலையின் உன்னதமாக திகழ்ந்த மேஜர் ஈழப்பிரியா என்கின்ற ஓர் பெண் வீராங்கனையின் நினைவாக தமிழீழ கராத்தே சுற்றுப்போட்டியும் வைப்பதற்கு தீர்மாணித்து அதனை நடைமுறைப்படுத்தினோம்.

இன்று வெளிநாடுகளில் இருந்து தொழில் ரீதியான கராத்தே வல்லுனர்களை அழைத்து எமத வீரர்களக்கு பயிற்சி வழங்கும் அளவிற்கு இக்கலையில் ஆர்வம் கொண்டள்ளொம்.எமது தேசத்து கராத்தே கராத்தே ஆசிரியர்கள்,மாணவர்கள் யாவரும் தமிழீழ கராத்தே சம்மேளனத்திற்கு பெரும் ஆர்வமும் ஒத்துழைப்பும் அளிக்கிறார்கள் இன்று கராத்தே கலை ஓர் இலக்கை நோக்கி வளர்க்கப்பட்டு வருவது எம் எல்லோருக்கும் மிக மகிழ்ச்சியே.மாவட்டங்கள் தோறும் பல்வேறு கராத்தே அமைப்புக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே கொடியின் கீழ் ஆயிரகணக்கான வீர வீராங்கனைகளை பயிற்சி பெற வைத்தமை ஒரு சாதனையே “ என தமிழீழத்தின் கராத்தே கலையின் தந்தையான ஷிகான் பொனிறொபேட் அவர்களும், அவர்களது பிரதம மாணவர்களும் கராத்தே நடுவர்களம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வளர்ந்துவரும் எமது விளையாட்டத்துiறியில் எமது தாயகத்தில் உள்ள எட்டு மாவட்ட வீரர்களும் சங்கமிக்க கூடிய ஓர் இடைக்கால அமைதி தோன்றியது. போருக்குமட்டும் முகம்கொடுத்து அந்த போரில் வென்றுவிட துடித்த எமது இளம் சமூகம் இக்காலதத்தை தமது விளையாட்டுத்திறன்களை அபிவிருத்தி செய்ய வேண்டம் என்ற தீர்மானத்திற்கு வந்தது அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதே தமது நொக்கம்.தமிழீழ தேசியம் எமது தனித்துவம். இவையே எமது எதிர்கால சுபீட்சத்துக்கு ஒரே வழி. இவ்வாரான முடிவில் எமது விளையாட்டு வீரர்களும் தமிழ் தேசியத்தினூடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். என்ற ரீதியில் தமிழீழ தேசிய விளையாட்டு விழாக்களை எமது தாயகம் தழுவியதாக நடாத்தி வருகின்றோம்.கடந்த மூன்று தேசிய விளையாட்டு விழாக்களிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒன்று சேர்ந்தனர்.

எமது தாயக நிலப்பரப்பில் வாழும் மு;ஸலீம் சிங்கள இளைஞர்கள் கூட எமது தேசியத்தின் பால் எமது தேசியக்கொடியின் கீழ் அணிவகுத்தனர். விளையாட்டுத்துறையின் மகத்துவம் இங்கு புலனாகியது.அத்துடன் வடகிழக்கிலுள்ள சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் மனதில் தென்பகுதி ஊடகங்களினால் தமிழர்களைப் பற்றியும் அவர்களின் தேசிய விடுதலை போரை நடத்திவரும் இயக்கத்தைபற்றியும் ஏற்படுத்தப்பட்டிருந்த படிமத்தை தலைகீழாக மாற்றி ஒரு ஆரோக்கியமான புரிந்துனர்வு ஏற்பட இவ் விளையாட்டு விளையாட்டு விழாக்கள் வழிவகுத்தன.தமிழீழத்தின் தேசிய அணிகளை உருவாக்கும் ஓர் முயற்சியில் நாம் இறங்கினோம்.

முதற் தடவையாக மகளிர் வலைப்பந்தாட்ட அணி தேர்ந்தெடுக்கப்பட வீரர்களை கொண்டு உருவாக்கி எடுத்தோம். இவ்வீரர்கள் பிரித்தானிய மண்ணில் நடக்கும் தமிழர் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் அங்கு கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அங்கு கலந்து கொண்ட போட்டிகளில் தொடர் வெற்றியாக 18 போட்டிகளில் வெற்றியீட்டி எமது தாயகத்துக்கு பெருமை சேர்த்தனர். இறுதியில் மெது தேசியத்தலைவரின் பாராட்டையும் பெற்றனர்.இதிலிருந்து ஓர் உண்மை புலனாகின்றது. தமிழர்கள் தனித்துவமாக தமது அடையாளங்களுடன் உலகத்தில் எதையும் சாதிக்கலாம். என்பதே அந்த செய்தி. தொடர்ந்து தமிழீழ உதைபந்தாட்ட அணியைத் தெரிவுசெய்துள்ளோம்.

அதுமட்டுமல்ல ஏனைய விளையாட்டுக்களிலும். தமிழீழ தெரிவு அணியினை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளோம்.உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியை நோக்கும் போது தமிழீழத்திதல் மிக தரமாக பேணப்பட்டு வரும் ஒரு விருப்புடைய விளையாட்டாக திகழ்கின்றது. இன்று எட்டு மாவட்ட வீரர்களும் ஒரே தரம் என்று கூறும் அளவிற்கு தாங்களாகவே பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். அத்தோடு எம்மால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற தொழில் ரீதியான பயிற்றுனர்களிடம் இருந்தும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

தமிழீழத்தில் மிக விரைவில் இலக்கைத்தொடும் விளையாட்டுக்களில் ஒன்றாக இன்று உதைபந்தாட்டம் திகழ்கின்றது.உதைபந்தாட்டத்தில் உதைபந்தாட்ட வீரர்கள் பலமிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக ரீதியாக பங்குபெறும் மாவீரர் கிண்ணத்தை சுவீகரிக்கும் கழகங்கள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் எம்மால் நடாத்தப்படும் தேசிய ரீதியான கேணல்கிட்டு வெற்றி கேடயத்துக்கு மோதுவார்கள். இப் போட்டி தமிழீழத்தில் எந்த கழகம் முன்னணியில் நிற்கின்றது என்பதை உணர்த்தம்.இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வுகள் ஜீன் மாதத்தில் எம்மால் நடாத்தப்பட்ட வருகின்றது. இப்போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட 4 பிரிவுகள் கலந்து கொள்ளும். புலம் பெயர் நாடுகளில் உள்ள அணிகளும் இதில் பங்கெடுப்பது வழமை. மேஜர் முரளி நினைவான வெற்றிககேடயத்துக்காக நடாத்தப்படும் .

இப்போட்டி தமிழிழத்தில் இளையோர் மட்டத்தில் உதைபந்தாட்டத்தை வளர்ப்பதற்கு ஏதுவாக அமைகின்றது.அத்துடன் இப்போட்டி மூலம் புலம்பெயர்ந்த மக்களின் அடுத்தசந்ததியினருக்கு தமது தாயகம் குறித்த உணர்வுகள் நேரடியாகப் பாச்சப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது தேசியம் மேலும் லலிமை பெற்றுள்ளது.இதே போல் இளையோர் தடகளப் போட்டியும் தேசிய அளவில் எம்மால் நடாத்தப்பட்டு வருகின்றது. 21வயதுக்கு உட்பட்ட சகல பிரிவுகளுக்கும் நடாத்தப்படும் இவ் மாபெருழூமத் தடகளப் போட்டியில் ஆயிரக் கணக்கான ஆண், பெண் வீரர்கள் பங்கெடப்பார்கள். வளர்ந்துவரும் இளையோரின் தடகள ஆற்றலுக்கு இப் பொட்டி முன்னுதாரனமாக அமைகின்றது.எதிர்காலத்தில் நாம் ஒரு நாட்டுக்கே உரித்தான சகல விளையாட்டுகளிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இன்று எமது வளங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளையும் பயிற்சிகளையுமே நடாத்தி வருகின்றோம்.

பல ஆர்வலர்கள் விளையாட்டு வழிகாட்டிகள் எமக்களிக்கும் ஆலோசனைகள், கருத்துக்கள் எமக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றது. திருவாளர் எதிர்வீரசிங்கம், திரு விமலராஜன் திரு. பத்மநாதன், திரு. குணரட்னம், திரு. அன்ரன் அன்பழகன், திரு. சிவனடியார் திரு. றொகான ராஜசிங்கம் பொன்று இன்னும்பலர் இன்று எம்முடன் பாடுபட்டு வரகின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள் மத்தியில் விளையாட்டுத்துறை நல்லநிலையை அடைய வேண்டும் என எண்ணியவர்கள்.அன்று போல் இல்லாது இன்று எமது இளைய சமுதாயம் சளைத்தது இல்லை என்பதை கடந்த மூன்று வருடங்களாக காட்டப்படுதம் சாதனைகள் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது.என்றும் இல்லாதவாறு இன்ற தமிழீழத்தில் மகளீர் உதைபந்தாட்ட அணிகள் உருவாகியுள்ளனர். உருவாகியது மட்டுமல்லாது உருவாக்கம் பெற்று ஒரு வருடகாலத்தில் அகில இலங்கை மட்டத்தில் 3வது இடத்தையும் பெற்று வந்துள்ளது.

இதில் இருந்து எமது வளர்ச்சியின் அடைவை தெரிந்து கொள்ளலாம்.எதர்காலத்தில் புலம்பெயர் ஐரோப்பிய நாட்டு எமது உறவுகளின் விளையாட்டு கழகங்கள் ஊடாக தமிழீழத்தின் பல மைதானங்களை புனரமைக்கத திட்டமிட்டுள்ளோம்.இன்னும் பல விளையாட்டுக்கள் எமது மண்ணில் ஆரம்பிக்கப்படாமலே உள்ளது. அன்றி வளர்க்கப்படாமலம் உள்ளது. ஓர் அகன்ற பார்வையின் ஊடாக இவற்றை நடைமறைபடுத்துவதில் பல தாமதங்கள் ;இருக்கின்றன. இருப்பினும் கால ஓட்டத்தில் ஒவ்வொன்றாக வெக்பெறும். இதற்கு எம் தேசத்து உறவுகள் அனைவரினதும் ஆலோசனையும் ஒத்துழைப்பும் எமக்கு தேவை என்பதுடன் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளின் பிரத்தியேகமான பங்களிப்பையம் வேண்டி நிற்கின்றோம்.