கல்முனை விவகாரத்தில் தெரியும் கூட்டமைப்பின் சீத்துவம் : மக்கள் கொந்தளிப்பு.!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாத பட்சத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாதென வலியுறுத்தி இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை மக்கள் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடந்த இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனையை தரமுயர்த்தும் விடயத்தில் அரசின் ஏமாற்று நடவடிக்கையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அக்கறையீனமுமே ஞர்னசார தேரர் போன்றவர்களின் தலையீட்டிற்கு வழிசமைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஷ்ணுகாந்தன், ஞானசார தேரரின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டது, குளம் வற்றுமென கொக்கு காத்திருந்ததற்கு ஒப்பானது என குறிப்பிட்டார்.

 

தாயகச்செய்திகள்