ஜனாதிபதியாய் சேவைசெய்ய தயார் என்கிறார் சஜித்

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“தந்தையின் பெயராலே நாட்டின் 220 லட்சம் மக்களின் சேவகனாக 24 மணிநேரமும் என்னை அர்ப்பணிக்க நான் தயாராகவுள்ளேன். அதற்கு நான் தயார்.” என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Allgemein