ஐரோப்பிய நாடொன்றை அதிர வைத்த பாரிய வெடிகுண்டு!

ஐரோப்பிய நாடொன்றை அதிர வைத்த பாரிய வெடிகுண்டு!

ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ எடையுடைய வெடிக்காத வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள சுமார் 16,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிராங்க்பர்ட் நகரில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைமையகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையிலேயே, 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, பிரித்தானியா விமானப்படைகள் 27 இலட்சம் டன் வெடிகுண்டுகளை ஐரோப்பாவில் வீசின. இவற்றில் பல வெடிக்காத வெடிகுண்டுகள், ஜேர்மனியின் பல இடங்களில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற சுமார் 2,000க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் ஜேர்மனியில் இன்னும் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

இதனை செயலிழப்பு செய்வதற்காக ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில், அமைந்துள்ள கட்டிடங்களில் வசிக்கும் சுமார் 16,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலகச்செய்திகள்