Dezember 4, 2022

வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் வீட்டிலிருந்தவர்களை மயக்கிய பின் கொள்ளையிட்ட கொள்ளையர்கள்!

யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

இந்த சம்பவம் வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­ல் இடம்­பெற்­றுள்­ளது.

வெளி­நாட்­டில் இருந்த உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

வீட்­டின் பின்­பக்க ஜன்­னல் கம்­பி­களை அறுத்து வீட்­டி­லுள் இறங்­கி­ய கொள்­ளை­யர்­கள் வீட்­டில் இருந்­த­வர்­களை மயக்­கி கொள்­ளை­ய­டித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­ வந்­துள்­ளது.

 சம்­ப­வம் தொடர்­பில் பருத்­தித்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­ட நிலையில் , சம்­பவ இடத்­துக்கு மோப்ப நாய்­கள், மற்­றும் சோக்கோ பொலி­ஸா­ரின் உத­ வி­யு­டன் பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் அங்கு விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

இதன்போது கைரேகை அடை­யா­ளங்­க­ளைப் பதிவு செய்­வ­ தற்கு பொலிஸார் முயன்­ற­ போது, கொள்­ளை­யர்­கள் கையு­றை­யைப் பயன்­ப­டுத்­தி மின்­கு­மிழ்­க­ளைக் கழற்­றி­யுள்­ள­தாக தெரி­யவந்துள்ள நிலையில் , பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்னெடுத்துள்ளனர்.