Dezember 4, 2022

தெற்கில் மீண்டும் குண்டுப் புரளி: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

குண்டு மிரட்டல் தொடர்பாக இன்று(08) சில சமூக ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களினால் தென்மாகாண மக்கள் பீதியடைந்துள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குண்டுப் புரளி தொடர்பாகப் பரவும் வதந்திகள் குறித்துத் தென் மாகாணத்தலுள்ள மக்களை அச்சமடைய வேண்டாமென இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் நிலைமைகள் காணப்படுகின்றன. பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பு நிலையிலுள்ளனர். குண்டுப் புரளி தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து பகுப்பாய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.