தடை செய்யப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் இதோ..!!

தடை செய்யப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் இதோ..!!

ஐரோப்பிய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவானது சுமார் 120 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு, இந்த நிறுவனங்கள் ஐரோப்பிய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

கோடை கால விடுமுறை நாட்கள் நெருங்கிவரும் நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள இந்த தடை உத்தரவால், சுற்றுலாவுக்கு திட்டமிட்டுருக்கும் பலர் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

குறித்த பட்டியலில் தடை விதிக்கப்பட்டுள்ள பல விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் பயணத்திற்கு உகந்தது அல்ல என்பதே முதன்மை காரணம் என கூறப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் கலந்தாலோசனை செய்த பின்னரே இந்த பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட விமான சேவை நிறுவனங்களில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவையாகும். மேலும், ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் வடகொரிய நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த பட்டியலில் ஒரு ஐரோப்பிய விமான சேவை நிறுவனமும் இடம்பெறவில்லை.

பட்டியலில் நேபாள நாடும் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள 18 விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் பாதுகாப்பற்றவை என தெரியவந்துள்ளது.

இதில் Yeti Airlines விமானமும் ஒன்று. பிரித்தானிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இந்த விமான சேவை நிறுவனத்தின் விமானங்களையே பயன்படுத்தி வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய வான்வெளியில் தடைவிதிக்கப்பட்ட விமானங்கள்:

 • Afghanistan – 2 (All airlines)
 • Angola – 7 (All airlines)
 • Democratic Republic of Congo – 21 (All airlines)
 • Republic of Congo – 8 (All airline)
 • Djibouti – 1
 • Equatorial Guinea – 2
 • Eritrea -2
 • Gabon 3 (All airlines)
 • Iraq – 1
 • Iran – 1
 • Kyrgyzstan – 13
 • Liberia – 1 (All airlines)
 • Libya – 7 (All airlines)
 • Moldova – 9 (All airlines)
 • Nepal – 18
 • Sao Tome and Principe – 2
 • Sierra Leone – 7
 • Sudan – 12
 • Suriname – 1
 • Venezuela – 1
 • Zimbabwe – 1
உலகச்செய்திகள்