சீனா வழங்கிய போர்க்கப்பல் சிறிலங்கா வந்தது

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய போர்க்கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

சீனாவின் ஷங்காய் கப்பல்கட்டும் தளத்தில் ஜூன் 5ஆம் நாள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்ட, P 625 இலக்கமிடப்பட்ட இந்தப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளால் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் உள்ளிட்ட சீன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

1994ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் சீன கடற்படையின் பயன்பாட்டில் இருந்தது.

சீன கடற்படை இந்தப் போர்க்கப்பலை, பயன்பாட்டில் இருந்து நீக்கிய நிலையில், சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கியுள்ளது.

112 மீற்றர் நீளத்தையும், 12.4 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்தப் போர்க்கப்பல், 2300 தொன் எடை கொண்டதாகும்.

18 அதிகாரிகளும், 92 கடற்படையினரும் இந்தப் போர்க்கப்பலில் பணி புரிக்கின்றனர்.

விரைவில் இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் ஆணையிட்டு இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

Allgemein