ராஜீவ் காந்தி கொலை! 28 வருடங்களுக்குப் பின் வெளியில் வந்தார் நளினி!

ராஜீவ் காந்தி கொலை! 28 வருடங்களுக்குப் பின் வெளியில் வந்தார் நளினி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரோல் வழங்கப்பட்ட காலப்பகுதியிலான பாதுகாப்புச் செலவை அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 வருஷமாக சிறையில் இருக்கிறார் நளினி.

அவரது மகளின் திருமணத்திற்காக பரோல் வழங்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனுமீதான விசாரணை வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஊடகங்களை சந்திக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஒரு மாத காலம் பரோல்வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 6 மாதங்கள் பரோல் வழங்குமாறு கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணையின்போது நளினியை உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று சென்னை உயர் நீதிமன்றில் நளினி முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் பிணை கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஒரு மாதகால பரோல் அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein