சச்சின் கேள்விக்கு டோனி பாணியில் பதில் கொடுத்த தமிழன் சுந்தர் பிச்சை

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு டோனி பாணியில் சுந்தர் பிச்சை பதில் கொடுத்துள்ளார்.

உலகக்கிண்ணம் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியானது கடந்த 30ம் திகதியன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியினை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சச்சின், புகைப்படம் எப்படி? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் சுந்தர் பிச்சை, தோனி பந்து வீச்சாளர்களை ஊக்குவிக்க கூறும் ‘மிகச் சிறப்பு’ என பொருள்படும் ‘பஹூத் பாதியா’ என்ற வாக்கியத்தை பயன்படுத்தி பதில் அளித்துள்ளார். மேலும் உங்களுடன் சேர்ந்து விளையாட்டை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வழக்கமாக தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, வீரர்களை ஊக்குவிக்க அவர் கூரும் வார்த்தை தான் ‘பஹூத் பாதியா’ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்