உதவிடுவோம் உறவுகளை காத்திடுவோம்“

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினராகிய நாம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரம், மருத்துவம், விவசாய ஊக்குவிப்பு மற்றும் மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சித்திட்டங்களுக்காக எம்மாலான உதவிகளை மக்கள் ஆதரவுடன் வழங்கிவருகிறோம்.

அந்த வகையில் “ மரம் நடுவோம் – மண் வளம் காப்போம்“ எனும் புதிய திட்டத்தின் அடிப்படையில்

யேர்மனியில் வசிக்கும் திரு.அருணாசலம் இராஜசிங்கம் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு உதயம் தொண்டுநிறுவனம் ஊடாக , 250 தென்னைமரங்கள் 50 குடும்பங்களிற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு நிதியினை வழங்கியவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். மேலும் அகவை நாளை கொண்டாடும் திரு.அருணாசலம் இராஜசிங்கம் அவர்களுக்கு உதயம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தாயகச்செய்திகள்