November 27, 2022

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலை பிரதானி கடமையேற்றார்! மேஜர் ஜெனரல் குமுது பெரேரா

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலை பிரதானி கடமையேற்றார்! மேஜர் ஜெனரல் குமுது பெரேரா

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக நேற்று காலை (4) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்த இவர் இடமாற்றத்தின் பின்பு இந்த பிரதி பதவி நிலை பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மாத்தளை புனித தோமஸ் கல்லூரி, கண்டி கிங்ஷ்வூட் கல்லூரி, இரத்தினபுரி புனித அலோசியஷ் கல்லூரி, தெனியாய மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இசிபதான கல்லூரியில் கல்விகளை மேற்கொண்டு 1984 ஆம் ஆண்டு இராணுவத்தில் பிரிவு 19 கீழ் கெடெற் அதிகாரியாக இணைந்து பயிற்சி நிறைவின் பின்பு இரண்டாம் லெப்டினன்ட் தரத்தில் முதலாவது சிங்கப் படையணியில் இணைந்தார். பின்பு பல்வேறு பதவிநிலைகளை வகித்து, 55 ஆவது படைப் பிரிவில் 2004 – 2005 ஆம் ஆண்டுகளில் பதவிநிலை கேணல் தரத்திலும், 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக 2005 ஆம் ஆண்டுகளிலும் கடமை வகித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சி பணிப்பாளராகவும், 2010 – 2013 வரை சுபசாதனை பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ அகடமியின் கட்டளை தளபதியாகவும், 51, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், சீனாவில் பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

இவருக்கு ரணவிக்ரம பதக்கம், ரன சூர பதக்கம், உத்தம சேவா பதக்கங்கள் இவரது சேவையை கௌரவித்து இராணுவத்தினால் வழங்கப்பட்டுள்ளது.