பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது ?

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அவர் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலே குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலைக்குச் சென்று பூஜித் ஜயசுந்தரவை கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலை தடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நடவடிக்கை எடுக்காமை தண்டனை சட்டக்​கோவைக்கு ஏற்ப தண்டனை வழங்க முடியுமான குற்றம் என தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Allgemein