இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகப் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(05) பலாலி விமான நிலையத்தில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடாத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்பிரகாரம், ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
PALALI AIRPORT DEVELOP