தென்சூடானில் பணியாற்ற இன்று பயணமான இலங்கை இராணுவ மருத்துக் குழு..!

 

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியில் சேவையாற்ற இலங்கை இராணுவத்தின் மருத்துவ குழுவொன்று தென் சூடானிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினர் இன்று அதிகாலை பண்டார நாயக்க சர்தேச விமான நிலையத்திலிருந்து தென் சூடானுக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.இந்த குழுவிற்கு லெப்டினன் கொமாண்டர் ரொஹான் பெர்ணாண்டொ தலைமை தாங்குவதுடன், இதில் 11 அதிகாரிகள் உட்பட 61 இராணுவ வீரர்கள் உள்ளடங்குகின்றனர். இந்த இராணுவக்குழுவினர் தென்சூடானில் ஒருவருடங்கள் வரையில் சேவையாற்றவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.ஐ.நாடுகள் சபை இலங்கையை துருப்பினரை வழங்கும் நாடாக அங்கீகரித்துள்ளது. இந்த நிலையிலேயே இலங்கையின் இராணுவ மருத்துவ குழுவினர் தென்சூடானின் போர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமெட் இரண்டாம் நிலை வைத்தியசாலைக்கான தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

Allgemein