நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா

நெதர்லாந்தில் தமிழர்விளையாட்டுவிழா 29-06-2019 சனிக்கிழமை உத்திரக்ற் மாநகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்து
திருவள்ளுவர் தமிழ்கல்விக்கலைக்கழகமும், ஈழத்தமிழர்விளையாட்டு ஒன்றியமும் இணைந்துநடாத்திய இவ்விளையாட்டுத் திருவிழாசுமார் 10.30 மணியளவில்ஆரம்பமாகியது. முதலில் ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு நெதர்லாந்துக்கிளைச் செயற்பாட்டாளர்களால் மைதானத்தைச் சுற்றிவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நெதர்லாந்து தேசியக்கொடியும் அடுத்து தமிழீழத் தேசியக்கொடியும் அதனையடுத்து திருவள்ளுவர் தமிழ்கல்விக் கலைக்கழகத்தின் கொடியும் பொறுப்பாளர்களால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு அடுத்து கல்விக்கழக பாடசாலை மாணவர்களால் அணிநடை மரியாதை செலுத்தப்பட்டு அம்மரியாதையை நெதர்லாந்துக்கிளை,மக்கள்அவை, திருவள்ளுவர் தமிழ்கல்விக்கலைக்கழகம் மற்றும் தமிழர்விளையாட்டு ஒன்றிய பொறுப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.தொடர்ந்து சிறுவர், சிறுமியர் ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான மெய்வல்லுனர் போட்டிகள் திருவள்ளுவர் தமிழ்கல்விக்கலைக் கழகத்தின் பொறுப்பாளரின் மேற்பார்வையில் பாடசாலை ஆசிரியர்கள் நிர்வாகிகளாலும், கிளைப்பொறுப்பாளரின் மேற்பார்வையில் கிளைச் செயற்பாட்டாளர்களாலும் ஒழுங்காக வழிநடத்தப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் எமது தாயக விளையாட்டான தாச்சிப்போட்டியும் மிகசிறப்பாக நடைபெற்றது.100இற்கு மெற்பட்ட மாணவமாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரியோர்கள் அனைவரும் உற்சாகமாக மகிழ்வுடன் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்வு சுமார் 19.00 மணியளவில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டு இறுதியாக எமது தாரக மந்திரமாம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் இனிதே நிறைவெய்தியது.

விளையாட்டுச்செய்திகள்