Dezember 4, 2022

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் காட்டம்

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என கூறிய எம்.ஏ.சுமந்திரன் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் குரிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது என்றும், குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்தாகள் எனவும் , இது தெரியாமல் ஜனாதிபதி இப்படி கூறுவது முற்று முழுதான தவறுஅவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இது விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல் என்றும் இப்படியான குற்றச்சாட்டு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.