மைத்திரியின் செயலுக்கு ஜேர்மன் கடும் எச்சரிக்கை!

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுப்பதோடு இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்த இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேன முயற்சி எடுத்துவருவது சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு உருவாகியிருப்பதோடு ஐநா சபை உட்பட  பல்வேறு நாடுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கும் அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடுமென ஜேர்மன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனியின் ஆளும் சமஷ்டிக் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கான வெளிவிவகார அலுவலகத்தின் ஆணையாளர் பார்பெல் கொஃப்லர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகச்செய்திகள்