நாடுகடந் தமிழீழ அரசாங்கம் கிழக்கு அணி என்று ஒன்றும் இல்லை !!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சிலரால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என நாத.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களையும் ஊடகங்களையும் விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி என்ற பெயரில் ஒரு சில விசமிகளால் பரப்பபடும் செய்திகளில் துளியளவும் உண்மை இல்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, ஈழத்தமிழர்கள் தேசத்துக்குரியவர் என்ற நிலைப்பாட்டில் ஒரு தேசமாகவே எமது அரசியற் செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை பலவீனப்படுத்தும் சதிகளில் சில விசமிகள் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் மக்களை விழிப்பாக இருக்க வேண்டுவதோடு, தேசமாக எமது செயற்பாட்டை அனைவரும் கொண்டிருப்போம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத்தமிழன் இணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் சுதன்ராஐ் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி

.

தாயகச்செய்திகள்