வயதான பாட்டியின் விபரீத ஆசை ?

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர் 93 வயதான ஜோஷி பேர்ட்ஸ் தனது நிறைவேறாத தனது ஆசை ஒன்றை தனது பேத்தியிடம் வெளிப்படுத்தியுள்ளார்

அது என்னவெனில் தன்னை ஒரு முறையாவது காவலதுறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான். தான் வாழ்கையில் பல அனுபவங்களை பெற்றுள்ளதாகவும், ஆனால் சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணர ஆவலாக இருக்கிறேன்’ என கூறினார்.

பேத்தி முயற்சி எடுத்த போதும் அதற்கு காவலதுறை மறுத்துவிட்டது எனினும்  இது அவரது கடைசி ஆசை என எடுத்து விளக்கிய பின் புரிந்துக் கொண்ட காவல்துறையினர் கைது செய்ய சம்மதித்துள்ளனர். பின்னர் காவலதுறை வந்து கைது செய்தது, அதன்பின்பு ஜோஷி பேர்ட்ஸ் மகிழ்ச்சி ததும்பிய முகத்துடன் சிறை சென்று திரும்பியிருக்கிறார்.

உலகச்செய்திகள்