
கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.
இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதம் இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள், நியூசிலாந்து சென்ற பின் அழைக்கிறோம் என்று சொன்னவர்களை கடந்த ஆறு மாதங்களாக தொடர்புக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள் இவர்களது உறவினர்கள்
இவர்களின் நிலை குறித்து அறிய மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்ய வேண்டும் என்கிறார்கள்.
இது குறித்து விசாரித்துவரும் கேரள பொலிஸார், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளோம் என்றும், மூன்று பேரை தேடி வருகிறோம் என்றும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.