கிழக்கு மாகாணத்திற்கான புதிய நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கம்.!!!

இன்றுமுதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பொறுப்பாளராக உயர்மட்ட ஆலோசகர்களால் தெரிவாகி இருக்கின்றேன்.

தற்போது உள்ள அரசியல் சூழ் நிலையில் கிழக்கு மாகான மக்களின் இருப்பைத் தக்கவைக்க வேண்டிய பொறுப்பு  உள்ளது. எனவே புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் சார்பாக குரல் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதையும் அதை எந்த ஒரு வெளிநாட்டிலும் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதாலும் இலங்கை அரசைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் இந்த அனயைருவாக்கி உள்ளோம்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொடி மற்றும் கடிதத் தலைப்புகளையே நாங்களும் பயன்படுத்துவோம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தேசங்களில் உள்ள சர்வதேசத் ஈழத்தமிழ் மக்களின்  சார்பாக கடந்த முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின் உருவானதுதான் இந்த நாடுகடந்த தமிழீழ  அரசாங்கம். அது சர்வதேசத்தில் ஜனநாய ரீதியாக சர்வதேசத்தில்  தேர்தல் மூலமாக 17 நாடுகளில்  உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தது.

2010 ம் ஆண்டில் இடம் பெற்ற அந்த தேர்தலில்  நானும் போட்டியிட்டேன் அதில் எனக்கு 570 வாக்குகள் கிடைத்தன. நான் உறுப்பினராக தெரிவாகவில்லை. ஆனால் செலவு செய்த நாணயம் சுவிஸ் fr500.வேட்பாளர் கட்டணம் இன்றைய நிலையில் இலங்கைப் பெறுமதி 90,000.க்கும் மேற்பட்டது

அடுத்தமுறை 2013 ம் ஆண்டு இடம் பெற்ற இரண்டாவது அவைத் தேர்தலில் போட்டியிட்டு கோரம் அதாவது போதிய போட்டி வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிடாததால் கோரம் இன்றி தேர்தலின்றி வெற்றி பெற்றேன் .

தொடர்ந்து 5 ஆண்டுகள் சூரிச். சப்ஹவுசன், துர்கவ் போன்ற சுவிஸ் மாநிலங்களுக்கான தமிழ் மக்கள் சார்பான பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு சுவிஸ் நாட்டின் மாநில அரசு  மற்றும் கூட்டாட்சி மத்திய அரசான பேர்ன் மாநிலப் பாராளுமன்றிலும் நான் என்னை ஒரு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாக எண்ணைப் பதிவு செய்துள்ளேன்.

என்னைப்போன்று முடிந்தால் தலைமை என்று சொல்லும் உருத்திரகுமாரனால்  முடிந்தால் எதையாவது செய்து ஒன்றும் செய்ய முடியவில்லை எங்களையாவது செய்ய வைக்கவும் முடியவில்லை..

வடக்குமாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான உறுப்பினர்களுள் நான் மட்டுமே கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவன். என்னை அரசாங்கத்தின் ஆள் என்றும் கருணாவின் ஆள் என்றும் என்னிடமே பலர் கூறி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையிலேயே நீண்டகாலம் நான் இவர்களுடன் செயலாற்றி உள்ளேன்.

இந்த நிலையில் கடந்த மூன்றாவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் எந்த ஒரு நபரும் கிழக்குமாக்காணத்தைச் சேர்ந்த எவரும் தெரிவாகவில்லை.

இந்தநிலையில் இதே நேரம்  சுவிஸ் நாட்டில் தேர்தல் நடத்தாமலே  6 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் தேர்தல் நடத்தாமல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது நடைமுறைக்கும் சட்டரீதியாகவும் செல்லுபடியற்றது. எனவே தேர்தல் நடத்தாதவரை நான் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுவிஸ் சூரிச் மாநில உறுப்பினராகவே உள்ளேன்.

உறுப்பினர் என்ற அதிகாரத்தின் கீழ்  நாடுகடந்த தாமிழீழ அரசாங்கத்தினால் அதன் தலைமைப் பீடத்தினாலும் இலங்கையின் வடக்குக் கிழக்கை முன்னிலைப் படுத்தி புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்களின் கோரிக்கையை முன்வைத்து செயல்ப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இலங்கையின் கிழக்குமாகான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க,  கிழக்குமாகாண அணி, சுவிஸ், , eastern province,Tigers of Tamil Eelam

அதனால் இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்குமாகான அணியாக இன்று முதல் என்னால் பிரகடனம் செய்யப்படுகின்ற்றது. பல புத்திஜீவிகளின் கருத்துக்கு அமைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்குமாகான அணியாக எனது தலைமையில் உருவாகின்றது.

இதில் உள்ள புத்தி ஜீவிகள் அனைவரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் திட்டத்தை முன்னெடுக்கவேண்டிய எதிர்கால நலனை முன்னிட்டு அனைத்து செயல்களிலும் எங்களால் உருவாக்கம் பெற்றுள்ள கட்டமைப்பு அணியினர் செயல்ப்படுவார்கள் என்பதை தெளிவாக உங்கள் முன் பிரமாணம் செய்கின்றோம்.

கிழக்குமாகான தமிழ் மக்களது இருப்பையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் கட்டிக் காப்பாற்றும் எந்த அரசு இலங்கையில் வந்தாலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை மற்றும் அதனுடனான சர்வதேச ஒத்துழைப்பையும் வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

Allgemein