யாழ் பல்கலையில் முஸ்லீம்களுக்கு நியமனம் – போராட்டத்திற்கு அழைப்பு

தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையினை அம்பலப்படுத்தும் பொருட்டும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வடக்கு மாகாணத்தைச் சாராத முஸ்லீம்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக முன்றலில் நாளை காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையிலயே இதுவரை காலமும் கல்வி அமைச்சினால் யாழ் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இவ் ஆண்டுக்கான விண்ணப்பங்களை நிராகரித்த கல்வி அமைச்சு வடக்கு மாகாணத்தைச் சாராத 130 முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் நியமனம் வழங்க பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே தமிழ் விண்ணப்பாதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அவர்கள்,
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் ரணிலைக் காப்பாற்றுவதிலும் தங்கள் பொக்கற்றுக்களை நிரப்புவதிலுமே தங்கள் காலத்தைப் போக்கிவருன்றனர். அவர்களுக்கு தமிழ் மக்கள் மீதோ வேலைவாய்ப்பற்றிருக்கும் தமிழ் இளைஞர்கள் மீதோ அக்கறை இல்லை இவற்றினைக் கண்டிக்கவே இப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

தாயகச்செய்திகள்