வாய் திறக்க மறுத்த தொண்டமான்?

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தரப்பினை ஆதரிக்க முடிவு செய்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழில் சந்தித்துள்ளார். ஆயினும் இருவருக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இன்று நடைபெற்றதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பு முன்னால் வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதனிடையே தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட ஊடகவியலாளர்களது பல கேள்விகளிற்கு விளக்கமளிக்காத ஆறுமுகம் தொண்டமான் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாயகச்செய்திகள்