இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் தீர்த்தக்கரைப் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தனது தலையில் பெற்றோலினை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற வேளை அது விபரீதமாகி தீப்பிடித்துள்ளது.
இதனையடுத்து தீ அணைக்கப்பட்டு எரி காயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.
இந்த மரணம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.