மட்டக்களப்பில் திடீர் தீ!

தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீ மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தென்னை மற்றும் பனைகள் கொண்ட தோப்பு ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு பயன்தரு நிலையில் இருந்த 200இற்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இது குறித்து மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீ ஏற்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயகச்செய்திகள்