பணத்திற்காக எதையும் செய்யும் முஸ்லீம்கள்?

முஸ்லிம் அமைச்சர் தாமாக பதவி வில­கி­ய­மையும், மீண்டும் பதவி ஏற்றுக்கொண்­ட­மையும் பணத்­திற்­கா­கவே என்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என்று  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,
ஐ.தே.க, சு.க மற்றும் பொது­ஜன முன்­னணி என்று வெவ்­வேறு கட்­சி­க­ளாக இருந்­தாலும் இவர்கள் அனை­வரும் ஊழல் மோசடி செய்­வதில் ஒரே அணி­யா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.
இதன் மூலம் இர­க­சிய ஒப்­பந்­தங்கள் மூலம் நாட்டை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பதே இவர்கள் அனை­வ­ரி­னதும் நோக்­க­மாகும்.
இவை மாத்­தி­ர­மின்றி,  இன­வாத அர­சி­ய­லிலும் ஈடு­ப­டு­கின்­றனர். சிலர் பணத்­திற்­காக அர­சியல் செய்­கின்­றனர். அமைச்சு பத­விகள் கூட பணத்­திற்­கா­கவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன.  இன்று தானாக பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காக என்பதே உண்மையாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்றர்.
Allgemein