சவுதிஅரேபியாவில் நிரந்தர விசா பெற சிறப்பு சலுகை!

சவுதி அரேபியா சிறப்பு நிரந்தவதிவிட  உரிமத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக உயர் பணக்காரமுதலீட்டாளர்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இரண்டு பிரிவுகளில் நிரந்தர வதிவிட உரிமம் வழங்கும் திட்டத்தில்
வாழ்நாள் நிரந்தர வதிவிட உரிமத்திற்க்கு சுமார் 213,000 டொலர் மற்றும்
ஓராண்டிற்கான நிரந்தர வதிவிட உரிமம்  கிட்டத்தட்ட 26,000 டொலரை செலுத்தியும்  இணையம்மூலம் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
நிரந்தர வதிவிட உரிமம் பெறும் வெளிநாட்டினர் அங்கு சொத்துகளை வாங்க முடியும் என்றும்  அதே வேளை அங்கு தொழில் செய்யவும் முடியும் என்றும் சவுதி அரசு குறிப்பிட்டுள்ளது. ஏற்க்கனவே சவுதி அரேபியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர் வாழ்வது குறிப்பிடத்தக்கது.
உலகச்செய்திகள்