மனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்! கடிதங்களையும் கிழித்தெறிந்தனர்;

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்.

இன்று மாலை கல்முனைக்கு சென்ற அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்  சுமந்திரன் மற்றும் கோடிஸ்வரன் ஆகியோரை போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்  அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கடிதங்களை பொதுமக்கள் போராட்டகாரர்கள் நிராகரித்து கிழித்து எறிந்ததோடு வர்த்தமானி அறிவித்தல் மட்டுமே தங்களின் கருத்துக்களை நம்பமுடியும் என கூறி அவர்களை விரட்டியடித்துள்ளனர். எனினும் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கையால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தாயகச்செய்திகள்