
இதையடுத்து, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் தெஹ்ரான் விமான தகவல் பிராந்தியத்தில், இயங்குவதை தடைசெய்து நேற்று நோட்டீஸ் வெளியிட்டது. இன்த நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகமும் இதேபோன்ற முடிவை இன்று எடுத்துள்ளது. “டிஜிசிஏவுடன் கலந்தாலோசித்ததன்பேரில், அனைத்து இந்திய ஆபரேட்டர்களும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, ஈரானிய வான்வெளியில் பாதிக்கப்பட்ட பகுதியை தவிர்க்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் பொருத்தமான வகையில் விமானங்களை வேறுபாதையில் இயக்குவார்கள் “என்று டிஜிசிஏ ட்விட்டரில் இன்று, தெரிவித்துள்ளது. அமெரிக்க ட்ரோன், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, உலகெங்கிலும் உள்ள முக்கிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் விமான பயண பாதைகளை மாற்றியமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.