இனி எல்லாமுமே முன்வரிசையில்?

இனிவருங்காலங்களில் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் தான் முன் வரிசையில் அமர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தவிட்டுள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர் . பாடசாலை மாணவர்கள் பின் வரிசையில் இருப்பதை அவதானித்த வடமாகாண ஆளுநர் உடனடியாகவே அந்த பாடசாலை மாணவர்களை முன் வரிசையில் வந்து அமருமாறு கோரியதோடு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் எப்போதும் பின்னுக்கு தான் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள்தான் முன்வரிசையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.நான் நீண்ட காலமாக இந்த விடயத்தைக் கூறி வருகின்றேன் எனினும் அது செயற்படுத்தப்படவில்லை. அந்த நடைமுறையை நான் இனி கட்டாயப்படுத்தவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
Allgemein