அணுக்கழிவு பாதுகாப்பானது என்றால் பாராளுமன்றத்தில் புதையுங்களேன்! ஆவேசமான சீமான்;

அணுக்கழிவு பாதுகாப்பானது என்றால் பாராளுமன்றத்தில் கொண்டுபோய் புதையுங்களேன் என  சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் தமிழகத்தில் நிலவும் தண்ணிர் தட்டுப்பாட்டை நீக்க அரசை வலியுறுத்தியும் நாம்தமிழர் கட்சியும் , தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் , நாம்தமிழர் கட்சி சீமான், இயக்குனர் களஞ்சியம் , தமிழ்தேசிய பேரியக்கம் உட்பட பல தமிழ் தேசிய உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

உலகத்திலேயே பாதுகாப்பான அணுஉலை என்று ஒன்றுமே இல்லை ,
இது பற்றி பொது விவாதத்துக்கு வர சொன்னால் யாரும் வர தயாராக இல்லை. இதை தட்டி கேட்டல் விஞ்ஞானியா என கேட்கிறார்கள், நில வளம் பாதிக்கும் திட்டங்களை பற்றி பேச விஞ்ஞானியாஇருக்கோணும் என்ற அவசியம் இல்லை விவசாயிய இருந்தால் போதும்.

குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாட இருக்கு என்றால் எப்படி அணுக்கழிவுகளை குளிர்விக்க முடியும். இதுவரைக்கும் தமிழகத்தில் இடம்பெற்ற அனர்த்தங்களில் தமிழர்கள் பாதிக்கப்படும்போது கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள் இதிலிருந்து எங்களை பாதுகாப்பார்கள் என்பதை எப்படி நம்பமுடியும்.

அணுக்கழிவு பாதுகாப்பனதேன்றால் எந்த மாநிலத்திலாவது புதைக்கலாம்தானே.ஆறுகளையும் ஏரிகளையும் பாதுகாக்க முடியாத நீங்க எப்படி அணுக்கழிவை பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள் என அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.

இந்தியச்செய்திகள்