November 27, 2022

பேச்சுவார்த்தை தோல்வி – கல்முனையில் குழப்பம்!

கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் சென்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பிரதமர் விடுத்துள்ள செய்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதகுருமார்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்போது குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அறிவிப்பை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. அத்துடன் அங்கு குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0Shares