பளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை!!

யா/ கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் பயிற்றுவிப்பாளர் வினோத்குமார் அவர்களின் ஊக்குவிப்பில் முதல் தடவையாக  யா/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் 2 தங்கம் 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கம் வென்றனர்.

அத்தோடு பாடசாலை அடிப்படையில் 46 புள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர். இப் போட்டியில் 17 வயதின் கீழ் 75KG  எடைப்பிரிவில் G.விக்கிரம் (திறமை-115KG ) 1ம் இடத்தினையும் 81KG  எடைப்பிரிவில் V.தனுஷிகன் (திறமை-108KG ) 3ம் இடத்தினையும், 20 வயது பிரிவின் கீழ் 55KG எடைப்பிரிவில் S.இளங்குமார் (திறமை-130KG ) 1ம் இடத்தினையும் , 73KG எடைப்பிரிவில் V.ஜேம்ஸ் பவிஷன் (திறமை-130KG ) 2ம் இடத்தினையும் 96KG  எடைப்பிரிவில் A.ஜெரோஷன் (திறமை-147KG ) 2ம் இடத்தினையும் மற்றும் 55KG எடைப்பிரிவில் J.வினோசன் (திறமை-98KG ) 4ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

       

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

தாயகச்செய்திகள்