தோண்ட தோண்ட-சோழர் சிலைகள் கண்டுபிடிப்பு! பூமிக்கடியில் தமிழர் வரலாறு!

தோண்ட தோண்ட சோழர் சிலைகள் கண்டுபிடிப்பு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான சாமிசிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் உள்ள முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரங்கள் இருந்துள்ளன. அதனை அகற்றும் பணியில் தொழிலாளர்களை வைத்து வெட்டி அகற்றி உள்ளார். அப்போது அதிகமாக பள்ளம் ஏற்பட்டதால் அருகில் உள்ள இடத்தில் சிறிது பள்ளம் தோண்டி அந்த மண்ணை மற்றொரு பள்ளத்தில் போட திட்டமிட்டுள்ளனர்.

பூமிக்கடியில் புதைந்த தமிழர் வரலாறு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் , , ,பேரையூர் எனும் கிராமத்தில் மரம் வெட்டும் போது கிடைத்த பொக்கிஷம்

முதலில் ஒரு மரத்தை வெட்டும் போது இரண்டு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளது.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் தோண்டிய போது ஏகப்பட்ட சோழர்கள் காலத்தின் ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளது என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழனின் தொன்மையான இந்து கலாச்சார வழிபாடு முறைக்கு இதுவே சாட்சி என்று இதைவிட வேறு சான்று தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து சமயத்தை காக்க தான் வாழ்நாளை அர்ப்பணித்த சோழன் புகழ் ஓங்குக.

Allgemein