கல்முனையில் பரபரப்பு ?

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம்,கல்முனை நகர் இன்று பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் பொதுத் தளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன.அனைத்து மதத் தலைவர்களும், தமிழ் அமைப்புகளும் இணைந்து கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டுவரும் உண்ணா நோன்புக்கு மட்டக்களப்பிலும் ஆதரவாக நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தச் சொல்லி கடந்த ஆட்சியிலும் எவ்வளவோ வலியுறுத்தியும்,முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் அன்றைய அரசும் தமிழர்களின் உரிமையில் உலைவைத்தது, என்ற செய்தியும் கிடைத்தது.முன்னாள் அமைச்சர் திரு வி..முரளீதரன் இதை நேற்று வெளிப்படுத்தினார்.அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர் திரு.க,கோடீஸ்வரன் பாராளுமன்றத்தில் பலதடவைகள் ஆணித்தரமாக பேசி, இதற்கு இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ட பின்னரும்,எதுவும் நடக்கவில்லை.மூன்று தினங்களுக்கு முந்தியும் அவர் ஆக்ரோஷமாக நாடாளுமன்றத்தில் இன்றைய நிலைபற்றியும்,மதத் தலைவர்களின் உண்ணாவிரதம்பற்றியும்,பேசினார்.இன்றுவரை எதுவும் நடக்கவில்லை.இன்று கல்முனைக்கு இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னா தேரர் வந்து கலந்துகொண்டு இருக்கின்றார்.இதே நேரம் கல்முனை முஸ்லிம் அரசியல் வாதிகளின் உந்துதலினால் திரளான முஸ்லிம்களும் தமிழ்மக்களின் கோரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளார்கள்.இதற்கு பதில் அரசு கையில் உள்ளது.கல்முனையில் பதட்டமும்,இயல்பு வாழ்க்கை குலைந்தும் காணப்படுவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது.என்றும் அறிய முடிகின்றது.

தாயகச்செய்திகள்