கடல் அலைபோல் பிரமிப்பூட்டிய மேக கூட்டம்!

ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி ஒன்று ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் வியப்பூட்டும் வகையில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமளித்தது.
இதனை பவுல் மெக்கல்லி என்பவர் பார்த்தவுடன் மகிழ் ஊர்ந்தில் இருந்தபடியே புகைப்படம் எடுத்துள்ளார்.
இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் செல்வதுப் போன்று காட்சி அளித்தது. இதனை பார்த்து வியந்தேன். உடனடியாக காரை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன்’ என கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம் காண்போரை பிரமிப்படையச் செய்துள்ளது. மேகக் கூட்டங்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும்போது பல்வேறு கோணத்தில் பயணிக்கும்.
காற்றின் திசைக்கேற்ப மேகங்கள் கூடும். இதனால் இதுப்போன்று அரிய மற்றும் ஆச்சரியமூட்டும் வகையில் இயற்கையாக மேகங்கள் கூடும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றன.
Allgemein