அதிகாலை விபத்து! 5 பேர் பலி! 12 பேர் காயம்!

பொலன்னறுவை – மட்டக்ளப்பு பிரதான வீதி வெலிகந்த வெனபிடிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் உளவூர்த்தி ஒன்றும் சிற்றூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

திபுலாகல மிஹிது பெரஹெராவினை பார்வையிட சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் சிற்றூந்தின் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றூர்த்தியின் அதிவேகம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதுள்ளது. இதனால் சிற்றூர்த்தி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Allgemein