இந்திய பாராளுமன்றத்தை அலறவிட்ட தமிழக எம்பிக்கள்!

இந்திய மக்களவையின் 17 வதுகூட்டத்தொடர் ஆரம்பித்து பதவியேற்பு இன்று நடைபெற்றது இதில்தமிழகத்தில் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றது இந்தியபாளுமன்றத்தையே உசுப்பியது .
காரணம் அனைவரும் தாய்மொழி தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அத்தோடு தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் எனகோசமிட்டனர்.
தருமபுரி எம்.பி செந்தில் குமார் கறுப்புச் சட்டை அணிந்துவந்திருந்தார். திராவிடம் வெல்க என்று முழங்கினார்.

சிதம்பரம் தொகுதி விடுதலைசிறுத்தைகள் எம்.பி திருமாவளவன் பதவியேற்று முடிக்கையில், வாழ்க அம்பேத்கர், பெரியார், வெல்க ஜனநாயம், சமத்துவம் என்று கூறினார். அப்போது ஆளுங்கட்சி தரப்பினர் வந்தே மாதரம் போல்கே என்று இந்தியில் முழக்கமிட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம்ஏற்ப்பட்டது. காவிகளின் கூடாரமமாக திகழும் இந்திய பாராளுமன்றத்தில் தமிழகம் எப்போதும் தனித்துவம் என்று மீண்டும் மீண்டும் புரியவைக்கின்றார்கள் , இதைபோலவே மக்களின் பிரச்சனைகளிலும் தங்களின் குரல்களை உயர்த்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பர்ப்பாகும.

இந்தியச்செய்திகள்