அமெரிக்க இராஜாங்கச் செயலரின் சிறிலங்கா பயணம் திடீரென ரத்து

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத திட்டமிடல் குழப்பத்தினால், ஏற்கனவே அறிவித்தபடி அவரால் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இம்முறை சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ள முடியாமைக்காக, அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ வருத்தமடைந்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்காவுடனான பலமான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ எதிர்பார்த்துள்ளதாகவும்  அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் நாள், அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்