மீண்டும் மாதா சொரூபம் உடைப்பு!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரக தூண்டுதலில் நடப்பதாக சந்தேகிக்கப்படும் சொரூப  உடைப்பு நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரமான மணியந்தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாத நபர்களினால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சொரூபம் வீதியோரமாக கண்ணாடி பெட்டியிடப்பட்டு மக்களது வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பின்னணியில் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இந்து ஆலய விக்கிரகங்கள் தாக்கப்படுவதும் அதன் தொடர்ச்சியாக யாழில் மாதா சொரூபங்கள் தாக்கப்படுவதுமான கதைகள் தொடர்கின்றது.
இதனிடையே சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயகச்செய்திகள்