கோத்தாவா மகிந்தவே முடிவெடுக்கட்டும்?

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுதந்திரக்கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை குறிப்பிடும் உரிமை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே உள்ளதென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
களுத்துறை, பயாகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரைக்கையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் இதுவரையில் குறிப்பிடப்படவில்லையென்றும்,  மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் தான் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Allgemein