இலங்கையில் மனைவிக்கு கணவன் செய்த துரோகம்! மனைவியை கொலை செய்ய 20 இலட்சம் பேரம் பேசிய கணவன்!

இலங்கையில் பெண் ஒருவரை கொலை செய்வதற்காக இருபது லட்சம் ரூபா பணம் மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவட்டுன பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் ஒருவரை கொலை செய்வதற்காகவே இவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பெண்ணை கொலை செய்வதற்கு ஒப்பு கொண்ட பெண்ணொருவரும், அவருக்கு துணையாக இருந்த நபரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்கம பிரதேசத்தை சேர்ந்த பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உள்ளூராட்சி சபை ஒன்றின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்படவிருந்த பெண்ணின் கணவரே இந்த ஒப்பந்தத்தை மற்றைய பெண்ணுக்கு வழங்கியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்தப் பெண்ணின் ஒப்பந்தம் வழங்கிய கணவர், வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Allgemein