Dezember 4, 2022

தமிழர் பிரச்சனை குறித்து பேச முக்கிய வெளிநாடொன்றுக்கு பயணமாகும் கூட்டமைப்பினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பேருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர்.

தமிழர் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்காவே இந்த நால்வரையும் மோடி புதுடில்லிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மோடியிடம் தமித்தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கு பதிலத்த மோடி அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு சிக்கலான பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தை ஆய்வு செய்த பின்னரே, அதுகுறித்து பார்க்க வேண்டும் என்றுதெரிவித்தார்.

இந்த நிலையிலேயே இந்தியப் பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினர் நால்வரை இந்தியாவிற்கு பேச்சுவாத்தைக்கு அழைத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் புதுடெல்லிக்கு எப்போது பயணம் செய்வார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.