மீண்டும் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க சந்திப்பு!

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம்  வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் நாள் முஸ்லிம் தலைவர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. குறிப்பாக மஹா   சங்கத்தினர் விடுத்திருந்த வேண்டுகோளை ஆராய்ந்து முடிவெடுக்கவே இச்சந்திப்பு என அமீர் ஹலீம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ரிசாத் பத்யூதீன், அசாத் அலி மற்றும் ஹிஸ்புல்லாஜ் ஆகியோர் மீண்டும் பதவிகளில் அமர்த்தப்படுவார்களா? இல்லையேல் அவர்களுக்கு வேறுபதவிகள் வழங்கப்படுமா? அல்லது பௌத்த போினவாதம் சும்மா இருக்கப்போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தாயகச்செய்திகள்