வைத்தியர் மொஹமட் ஷாபி:உள்ளே குத்துப்பாடு?

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபியுடன் சிஸேரியன் சத்திரசிகிச்சையில் ஈடுபட்ட 69 தாதிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சிஸேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் வேளையில் வைத்தியர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை செய்வதையோ பலோபியன் குழாய்களுக்கு சேதம் ஏற்படுத்துவதையோ தாம் ஒருபோதும் கண்டதில்லை என வாக்குமூலமளித்த 69 தாதிகளும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தாதிகளில் மேலும் ஒரு தாதியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ள நிலையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர் ஷாபி 4000 பெளத்த தாய்மார்களுக்கு கருத்தடை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தாயகச்செய்திகள்