பகிடிவதை விளைவு! 4 பேர் மருத்துவமனையில்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையால் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் 4 மாணவர்கள் மீது, இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயகச்செய்திகள்