சஹரான் தொடர்பில் கண்டியில் இருவர் கைது;

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளனர்.
தாயகச்செய்திகள்