எதற்கும் விடப்போவதில்லை: விக்கினேஸ்வரன்!

எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் வடகிழக்கை மாற்றாந்தாய் போன்று நடத்துவதையே நான் கண்டுள்ளேன் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் புதிய வாழ்வு நிறுவனத்தினால்; ஆரம்பிக்கப்பட்ட ,போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயி;ற்சி நிலையத்தை வைபவரீதியாகத்திறந்து வைத்து அவர் உரையாற்றுகையில் இதனை தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்ல. நாங்கள் எமது முயற்சி மூலம் முன்னேற முன்வந்தால் எமது முயற்சிகளைத்தடுத்துநிறுத்தவும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பின் நிற்கவில்லை.உதாரணத்திற்கு மரக்கறி,பழங்கள் போன்றவற்றை இங்கு பயிரிட்டுவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒரு மத்தியகிழக்கு ஸ்தாபனம் முன்வந்தது. 200 ஏக்கர் காணி தேவைப்பட்டது. அடையாளம் கண்டு அவர்களுக்குக் குத்தகையில் கொடுக்க நாம் முன் வந்தோம். முதலீட்டாளர்கள் காணியை வந்து பார்த்து நிலம்,நீர்,சுற்றாடல்,போக்குவரத்துவசதிகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன என்றார்கள். இன்னும் ஓரிருவாரங்களில் ஒப்பந்தத்தை கையெழுத்திட நினைத்திருந்தபோது கொழும்பில் இருந்து காணிச்செயலாளர் நாயகம் “குறித்த காணிவனத் திணைக்களத்திற்கு உரியது,காணி தரமுடியாது”என்றார்.
குறித்த காணி எந்தக் காலத்திலும் வனத் திணைக்களத்திற்குச்சொந்தமாக இருந்ததில்லை.போரின் போது 2007ம் ஆண்டு தான்தோன்றித்தனமாக வனங்களை அடையாளப்படுத்திவிட்டு அவற்றை வைத்து எம்மை முன்னேறவிடாமல் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.
வெளிநாடுகளில் வசிக்கின்ற புலம் பெயர்ந்தமக்கள் அவர்தம்நெருங்கியஉறவினர்களும் நண்பர்களும் வாழ்வில் வளம் பெறவேண்டும் என்றஅவாவில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் அங்கிருந்தவாறே நிதிஉதவிகளைப் புரிந்துவருகின்றனர். ஆனால் அவர்களால் வழங்கப்படுகின்ற உதவிகள் முறையாக செலவுசெய்யப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கத்தவறிவிடுகின்றனர். இதுவே இளைஞர் யுவதிகளைத் தப்பான வழிக்கு கூட்டிச் செல்ல இடமளிக்கின்றது என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தாயகச்செய்திகள்